17 வது மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கமும், ஓ.பி.எஸ். ஒரு பக்கமும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேடை போட்டு பேசினால் நேரமாகும் என்பதால் கான்வாயில் நின்றே பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்று தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு கடைசியாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவுக்காக ஆலங்குடியில் பிரசாரம் செய்வதாக இருந்தது. நேரமாகிவிட்டதால் அது ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இரவு 9 மணிக்கு ஒரத்தநாட்டில் த.மா.கா. வேட்பாளர் என் ஆர். நடராசனுக்கு வாக்கு சேகரித்து பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து பறந்த ஒரு செருப்பு எடப்பாடியின் கான்வாய் மீது விழுந்து கிடந்தது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசிய மர்ம நபரை போலிசார் தேடி வருகின்றனர்.