Published on 01/07/2019 | Edited on 01/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியை தழுவியது. இதனால் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில், எந்த வகையிலும் தன் ஆட்சிக்கு எதிரா தங்கள் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிச்சிடக் கூடாதுங்கிற கவலையோடத் தான் எடப்பாடி யோசிச்சிக்கிட்டிருந்தாரு. எம்.எல்.ஏ.க்களை எல்லாம் தனித்தனியா கூப்பிட்டுப் பேசினார். அப்ப சீனியர்கள் சிலர், எங்களுக்கு மந்திரி பதவிதான் கிடைக்கலை. வாரியப் பதவிகளையாவது கொடுக்கலாமேன்னு கேட்டிருக்காங்க.

அதனால், நம்பிக்கையில்லாத் தீர்மான விவகாரத்தை மேனேஜ் பண்ணியதும், 32 வாரியங்களுக்கான சேர்மன் பதவிகளைக் கட்சியில் இருக்கும் தன் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப் போறாராம் எடப்பாடி. இதன் மூலம் கட்சியில் தன் செல்வாக்கை அதிகரிச்சிக்கலாம்ன்னும் அவர் கணக்குப் போடறார். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டிய நிர்பந்தமும் நெருக்குது. ஆகஸ்ட்டில் தேர்தலை நடத்திடுவோம்ன்னு நீதிமன்றத்தில் அரசு சார்பில் வாக்குறுதி கொடுத்திருக்கும் எடப்பாடி, மேலும் 2 மாதம் அவகாசம் கேட்கலாமான்னும் யோசிக்கிறார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.