Published on 04/07/2019 | Edited on 04/07/2019
பதவிக்கும், கட்சிக்கும் ஆபத்தில்லைன்னதும் முதல்வர் எடப்பாடி தன்னை ஜெ.வுக்கும் மேலா நினைச்சிக்கிட்டு தன்னை ஹைடெக்கா ஆக்கிக்கிட்டாராம். முன்பு போல் அவரை அவர் வீட்டில் கட்சிப் பிரமுகர்கள் எவராலும் எளிதா பார்க்க முடியாதாம். அங்கிருக்கும் ஒரு டீம்தான் என்ன ஏதுன்னு விசாரிக்குதாம். எடப்பாடி காலையில் வாக்கிங் போறதுக்காக 300 மீட்டர் தூரத்துக்கு கிரானைட்டில் சாலை போட்டிருக்காங்களாம். ஜெ. இருந்தப்ப அவருடைய டூரின் போது, ரெஸ்ட் ரூம் வசதியோடு வரும் ஸ்பெஷல் வேனைப் போலவே, எடப்பாடியின் கான்வாயில் அவருக்காக இப்ப அதி நவீன கேரவான் இடம்பெறுதாம்.
இதனால் எடப்பாடியை எளிதாக சந்திக்க முடியாமல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர். சமீபத்தில் தினகரனின் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிமுகவில் இணைந்து வருவதால் கட்சியின் பலம் அதிகரித்து வருகிறது என்று சந்தோஷத்தில் அதிமுக தலைமை இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜெயலலிதா போல் கட்சி நிர்வாகிகளை நடத்த ஆரம்பித்துவிட்டார் என்றும் கூறிவருகின்றனர்.