Published on 18/04/2019 | Edited on 18/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் தொடங்கிய தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கதிர் ஆனந்த் அவரது மனைவி, திமுக பொருளாளர் துரைமுருகன் அவரது மனைவி ஆகியோர் காட்பாடி காந்தி நகர் பகுதியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.