Skip to main content

மாஸ்க் இல்லை என லெட்டர் அனுப்பிய டாக்டர்... இந்த நேரத்தில் இடமாற்றம் செய்த எடப்பாடி அரசு... அதிருப்தியில் திமுக!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

சென்னையில் நான்கு முக்கியமான மருத்துவமனைகள் கரோனாவிற்கு எதிராகத் தீவிரமாகச் சிகிச்சை அளித்து வருகிறது. அதில் முக்கியமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இருக்கும் மருத்துவர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை, போதிய மாஸ்க் மற்றும் கை உரைகள் இல்லை என்று புகார் எழுந்துள்ளது.  இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் சீனியர் டாக்டர் சந்திரசேகர் அரசுக்கு போதிய மாஸ்க் இல்லை என்று கடிதம் எழுதியுள்ளார். 

 

 

dmk



இந்த நிலையில் சீனியர் டாக்டர் சந்திரசேகரைத் தூத்துக்குடி மருத்துவ கல்லூரிக்கு துணைப் பேராசிரியராக மாற்றி தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவி வரும் இப்படிப்பட்ட சூழலில் இவரின் பணியிட மாற்றம் செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

letter



இந்தச் செயலை திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் கண்டித்து இருக்கிறார். இவரின் பணியிட மாற்றத்திற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும், ஆனால் இப்படிபட்ட எமர்ஜென்சி காலகட்டத்தில் அவரைப் பணியிட மாற்றம் செய்வது தவறு, 21 நாள் லாக் டவுன் இருக்கும் போது இப்படி நடவடிக்கை எடுப்பது அந்த மருத்துவரையும், அவரின் குடும்பத்தையும் மன ரீதியாக பாதிக்கும். உடனே சுகாதாரத்துறை அமைச்சர் இந்த உத்தரவைத் திரும்ப பெற வேண்டும், என்று தருமபுரி திமுக எம்.பி டாக்டர்.செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்