தமிழகத்தில் 2ஆம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18ஆம் தேதி 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.மேலும் வரும் மே 19ஆம் தேதி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளிடையும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருகின்ற மே 23 ஆம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் எந்த கட்சி ஆட்சிக்கு வரப் போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசியல் நிலவரம் இருக்கிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சி கவிழுமா? இல்லை தொடருமா என்கிற விவாதங்கள் அரசியல் விமரகர்களிடையே எழுந்து வருகின்றன.இன்னொரு புறம் 4 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளையும் வெற்றி பெற வேண்டும் என அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மே மாதம் 23ம் தேதி மதியத்துக்கு மேல் யார் வெற்றி பெறுவார்கள் என்று நிலவரம் தெரிந்துவிடும். அதற்கு முன்னெச்சரிக்கையாக சில அரசியல் திரைமறைவு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனக்கு 22 தொகுதி இடைத்தேர்தலில் 3 சீட் உறுதியாக கிடைக்கும் என்று கூறி வருகிறாராம். அதிமுக தரப்பினரோ குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் வெற்றி உறுதி எனக் கணித்துள்ளது. இந்த கணக்குகள் எல்லாம் பணப்பட்டுவாடாவுக்கு பிறகு நடந்தவை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக பணப்பட்டுவாடா செய்ததை நம்பி 4 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தொடரும் நம்பிக்கையில் இருக்கிறது அதற்காக தான் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் உள்ளதாக உளவுத்துறை அறிக்கை கொடுத்ததாக அரசியல் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருத்துக் கணிப்பின் படி பார்த்தால் தமிழக்தில் இழுபறி நிலையா இல்ல அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு திமுக ஆட்சியை தொடர்வார்களா என்று மே 23ஆம் தேதிக்கு பிறகு உண்மை நிலவரம் தெரியவரும்.