தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சக்கரபாணி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர், சாஸ்தா நகர், வள்ளுவர் நகர் மற்றும் களஞ்சிபட்டி ஜவ்வாதுபட்டி தங்கச்சி ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் கிராம சபை மக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டங்களில் தொகுதி மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசும்போது, “பேரூராட்சியாக இருந்த ஒட்டன்சத்திரம், தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
வள்ளுவர் நகரிலிருந்து திடீர்நகர் வரை தார் சாலை அமைத்தது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளில் அரசு கலைக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகம் நிறுவப்படும். தொகுதி மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் பொருட்டு சட்டமன்றத்தில் எடுத்துரைத்து பரம்பிக் குளம் ஆழியாறு நீர்த்தேக்க பகுதியில் இருந்து ஒட்டன்சத்திரத்தில் குடிநீர் கொண்டுவரும் திட்டத்திற்கு ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
வினோபா நகர் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீடுகளுக்கான பட்டா வழங்கப்படும். மேலும், வீடு இல்லாதவர்கள் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி குடி மராமத்து குடி அமர்த்தப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் ஆறுமுகம் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.