திமுக தலைமை கழகம் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கோயமுத்தூரில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்பது போலவே, சென்னையிலும் கூடுதலாக மாவட்ட செயலார்களை நியமிக்க போகிறார்களாம்.
சென்னை திமுக 4 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக 2015 ஆம் ஆண்டு உள்கட்சி தேர்தலில் பிரிக்கப்பட்டது. சென்னை கிழக்கு பிகே சேகர்பாபு, சென்னை மேற்கு அன்பழகன், சென்னை வடக்கு சுதர்சனம், சென்னை தெற்கு மா .சுப்ரமணியன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பிறகு இடைத்தேர்தலில் திமுக சந்தித்த தேர்தல்கள் எல்லாம் பெரும்பாலும் தோல்வியை சந்தித்தாலும் ஆளுங்கட்சியின் பணபலம் அதிகார பலத்தால் ஆளும் கட்சி வெற்றி பெற்றது என்று எளிதாக திமுகவினர் எடுத்துக்கொண்டனர்.
ஆனால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் எந்த விதமான சின்னம் மற்றும் ஆள் பலம் இல்லாமல் எளிதாக 20 ரூபாய் நோட்டை கொடுத்து வென்றுவிட்டார். இதில் பெரும் ஷாக்கான அறிவாலயம் மாவட்ட செயலாளராக இருந்த சுதர்சனம் மீது நடவடிக்கை எடுக்க இருந்த நேரத்தில் கள ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் நடந்த கலந்தாய்வில் ஒரு சில இடங்களில் மட்டும் நிர்வாக வசதிக்காக மாற்றங்களை செய்து விட்டு மற்ற இடங்களில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யாமல் விட்டுவிட்டது.
இதன் காரணமாக சென்னை மேலும் மேலும் தொய்வடைந்த நிலையில் நிர்வாகிகள் இருந்தனர். தற்போது ஜெ அன்பழகன் மறைந்த காரணத்தினால் அந்த இடத்திற்கு இளைஞரணி நிர்வாகி சிற்றரசு நியமிக்கப்பட்டார். அவருடைய தேர்வில் அதிர்ச்சிக்குள்ளான ஆயிரம்விளக்கு எம்எல்ஏ செல்வம் திமுகவில் இருந்து விலகி விட்டார். கட்சித்தலைமை நடவடிக்கைக்கு உள்ளதாம். இதனால் நிர்வாக வசதிக்காக திமுகவில் உள்ள மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் தற்போது உள்ள நான்கு மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று தெரிகிறது. அதில் மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்று பிரிக்கப்படலாம் என்று தகவல் உலா வருகிறது. இதிலும் மூத்த மாவட்ட செயலாளர்களாக இருக்கக்கூடிய மா சுப்ரமணியன், பிகே சேகர்பாபு ஆகியோருக்கு கூடுதலாக இரண்டு தொகுதிகள் என்று ஒதுக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டால் பின் வரும் மாவட்ட செயலாளர்களும் தொகுதிகளும் வரலாம் என்று அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது. இப்பொழுது இருக்கும் மாவட்ட செயலாளர்களில் நிச்சயமாக சுப்ரமணியம், பிகே சேகர்பாபு ஆகியோர் சென்னையில் தவிர்க்க முடியாத சக்திகளாக இருக்கிறார்கள். இவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது என்பது அறிவாலயத்தில் கணிப்பு,
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிற்றரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதியும் தேர்வு என்பதால் அவரும் நிச்சயம் தொடர்வார் என்பது தெரிகிறது.
சோழிங்கநல்லூர், மயிலாப்பூர், வேளச்சேரி, மூன்று தொகுதிக்கு ஒருமாவட்டம் நியமிக்க போவதாகவும் அதற்கு சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த ரமேஷ்க்கு வாய்ப்புள்ளதாகவும், ராயபுரம், ஆர்கே நகர், திருவெற்றியூர் மூன்று தொகுதிக்கும் மா.செவாக கே.பி.சங்கர் வாய்புள்ளதாகவும், மாதாவரம் ,கொழத்தூர், பெரம்பூர் மூன்று தொகுதிக்கும் சுதர்சனம் ஆர்கே நகர் தோல்வி எதிரொலியாலும், வாய்ப்பு மீண்டும் தருவது என்பது வாய்பில்லை என்றும், மேலும் ஆர்.டி. சேகர், அல்லது புழல் நாராயனுக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தலைமையில் பேசப்படுவருகிறது. இதன் மூலம் வருகின்ற தேர்தலுக்கு திமுகவின் அசைக்கமுடியாத வெற்றியை நிலை நாட்ட தொடர்ந்து பயணிக்கிறது என்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.