தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா' செயல்பாட்டுக்கு எதிராக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீர் என்று பொங்கியுள்ளார்.
இதன் பின்னணி பற்றி விசாரித்த போது, ஏற்கனவே சர்ச்சைகளில் அடிபட்ட கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்தின் வழியாக, உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்ததில் அமைச்சர் காமராஜ் புகுந்து விளையாடியதாகப் பேச்சு அடிபடுகிறது. அவர் மகன் டாக்டர் இனியனின் மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தின் பெயரில், தஞ்சை சரபோஜி கல்லூரி எதிரில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி ஒரு மல்டி லெவல் மருத்துவமனை கட்டப்படுவது பற்றி ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதை அந்த நிறுவனமே கிஃப்ட்டாக கட்டித் தருவதாகச் சொல்கின்றனர். இது சம்பந்தமான விவரங்களை தி.மு.க தரப்பு திரட்டியுள்ளது.
இதையறிந்த எடப்பாடி, தி.மு.க.வால் குறிவைக்கப்பட்டிருக்கும் நீங்களே, தி.மு.க.வுக்கு பதில் கொடுத்து அதோடு ஃபைட்டை ஆரம்பியுங்கள். தி.மு.க, தலைமைச் செயலாளரிடம் கொடுத்த ஒரு லட்சம் மனு குறித்து பதில் சொல்லுங்கள் என்று சொல்லியதாகச் சொல்கின்றனர். அதனால் அமைச்சர் காமராஜூம், தி.மு.க. தந்த பொதுமக்கள் மனுக்களில் சிறு-குறு தொழில் பற்றிய கோரிக்கைகள் இல்லை. ரேஷன் பொருள் தட்டுப்பாடு பற்றிதான் இருக்கிறது என்று மீடியாக்களிடம் கூறியுள்ளார். ஆனால், இதே அமைச்சர்தான் ஏற்கனவே, தமிழகத்தில் உணவுப் பொருள் தட்டுப்பாடே இல்லாமல் ரேஷனில் வழங்கப்படுகிறது என்று சொல்லியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.