தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப் பெரிய ஒன்றியமான ஒட்டப்பிடாரத்தில் 22 வார்டுகளில் தி.மு.க. 12, காங்கிரஸ் 2, சி.பி.எம். 1 ஆக மொத்தம் 15 இடங் களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. தொகுதி எம்.எல்.ஏ. சண் முகையாவின் மனைவி சுகிர்தா, மருமகன் ரமேஷ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனது உறகளுக்கே பதவியைப் பெற சண்முகையா முயற்சி செய்கிறார். ஆனால், எம்.எல்.ஏ. பதிவி போதாதா? சேர்மன் பதவியும் வேணுமா? கட்சியில் வேறு யாரும் வளரக்கூடாதா? என்று தி.மு.க. கவுன்சிலர்கள் மத்தியில் புகைச்சல் கிளம்பியுள்ளது.