Skip to main content

ஜூலை 16- ஆம் தேதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

 

dmk mps meeting held on upcoming june 16th

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19- ஆம் தேதி அன்று கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடங்குகிறது. 

 

இதனையொட்டி சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் ஜூலை 16- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். 

 

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தி.மு.க. தரப்பில் முன் வைக்க வேண்டிய தமிழக மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 
 

 

சார்ந்த செய்திகள்