Published on 28/01/2022 | Edited on 28/01/2022
தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இன்று (28/01/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளியானதால் அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.