![DMK volunteers at the celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/6C_i3y8xTNs_NsViwthNxYt8dgECj3SlMo-WI2SruIE/1619940830/sites/default/files/2021-05/cele-2.jpg)
![DMK volunteers at the celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/RyPjJQKfMitY0QdEsSMt3jdsos5C5Ng4-SkK7arTt9w/1619940830/sites/default/files/2021-05/cele-1.jpg)
![DMK volunteers at the celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/PhGHdfW8yYwDruICw6_6Naio-US_ljT1PJZH5MjMm0o/1619940830/sites/default/files/2021-05/cele-4.jpg)
![DMK volunteers at the celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/UcwYzubour-ovlq43S4fQkjymF1JZhvgt3HaE_8Lfxs/1619940830/sites/default/files/2021-05/cele-3.jpg)
![DMK volunteers at the celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/Hf5D-5UKXoBT9tuHnGsw0He7rMsWk9r4QEusQQYqYiQ/1619940830/sites/default/files/2021-05/cele-6.jpg)
![DMK volunteers at the celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/VU6Ej1wXf8enJPYbvxgad-kszT8PhN1-SLBVo1VdRXo/1619940830/sites/default/files/2021-05/cele-5.jpg)
![DMK volunteers at the celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/vTx3rxwQZ7uxx3eQCojYFgZhuaJa1Y-r6ujRHwxwv_A/1619940830/sites/default/files/2021-05/cele-7.jpg)
![DMK volunteers at the celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/RZRmWYAHvPS1ycRY0bPLrQqlPNzhU-ymMOw6sFudNQI/1619940830/sites/default/files/2021-05/cele-8.jpg)
தமிழகம், அசாம், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளது. மே 2ஆம் தேதியான இன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அதற்கு முன்னர் கட்சி வேட்பாளர்கள், கட்சி முகவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கரோனா பரிசோதனை மற்றும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதேவேலையில், தற்போதைய நிலவரப்படி திமுக முன்னணியில் இருப்பதைக் காண முடிகிறது. தொடர்ந்து இன்னும் பல தொகுதிகளில் திமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கின்ற நிலையில், இறுதியான முடிவுகளைப் பொறுத்தே யார் முழுமையான வெற்றி பெறுவார்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள முடியும். இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் திமுக வெற்றியை ஆரவாரமாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.