
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 10.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 131 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 102 சட்டமன்றத் தொகுதிகளிலும், மநீம கூட்டணி 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
கடலூர் சட்டமன்றத் தொகுதி:
அய்யப்பன் (திமுக) - 29,662
சம்பத் (அதிமுக) - 28,124
ஞானபண்டிதன் (தேமுதிக) - 618
ஆனந்தராஜ் (மக்கள் நீதி மையம்) - 1,100
ஜலதீபன் (நாம் தமிழர்) - 2,309
1,538 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார் திமுக வேட்பாளர்.