கரோனாவின் வேகம் தமிழக மக்களைப் பீதியில் உறைய வைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சென்னை நிலவரம் மக்களின் மனதுக்குள் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் தற்போது கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த மாதம் தினசரி நூறுபேர், இருநூறு பேர் என்று ஆரம்பித்த தொற்றுக் கணக்கு தற்போது ஐநூறைக் கடந்து தினசரி ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட, 144 போடப்பட்டிருக்கும் சென்னையிலேயே வாகன நெரிசல் இருக்குதே, இது தான் 144-இன் லட்சணமான்னு கேள்வி எழுப்பியதோடு, தளர்வுகள் மூலம் கரோனா தொற்றை அதிகமாக்கியிருக்கும் அரசின் மெத்தனப் போக்கை அழுத்தமாச் சுட்டிக்காட்டி, இனியாவது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.