Skip to main content

பெரியார் பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது... திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சனம்!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார்.  அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார்.  அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது.  அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார்.இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் அவுட்லுக் என்ற பத்திரிகையின் ஆதாரங்களை காண்பித்து தான் கூறியது சரிதான் என்றும் கூறினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.
 

dmk



இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், பெரியார் இவ்வுலகிலிருந்து மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட இன்னும் விவாத பொருளாக இருக்கிறார். பெரியார் பற்றி ரஜினிக்குத் தலையும் தெரியாது, வாலும் தெரியாது. அதனால் அவர் பேசாமல் இருப்பதே நல்லது என்று விமர்சித்தார். அதே போல் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்