Skip to main content

கலக்கத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளா்கள்!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

 

        உள்ளாட்சி தோ்தல் வெற்றி என்பது திமுகவுக்கு தலை நிமிர்ந்து நிற்க கூடியதாக இருந்தாலும் மாவட்ட ஊராட்சி தலைவா் மற்றும் ஊராட்சி ஓன்றிய தலைவா் பதவிகளை கணிசமாக அதிமுக கைப்பற்றியது. இந்த நிலையில் 2021 சட்டமன்ற தோ்தலை சந்திக்கும் விதமாக உள்ளாட்சி தோ்தலில் சோடை போன மாவட்டத்தின் மாவட்ட செயலாளா்களை மாற்றும் முடிவாடு கட்சி தலைமை முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

Kanyakumari



இதில் உள்ளாட்சி தோ்தலில் குமரி மாவட்டத்தில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது திமுக. மேலும் ஈகோ பிரச்சனையில் குமரி மேற்கு மாவட்டத்தில் திமுகவும் காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் தான் அதிக இடங்களை கைப்பற்றியது. இதே போல் குமரி கிழக்கு மாவட்டத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியாக போட்டியிட்ட பிறகும் திமுக படுதோல்வியை சந்தித்தது. இரண்டு ஒன்றியங்களில் தலைவா் பதவிக்கு திமுகவுக்கு வாய்ப்பு இருந்தும் அதை அதிமுகவுக்கு தாரை வார்த்து கொடுத்தது திமுக. ஒரே ஒரு ஒன்றியத்தை மட்டும் கைப்பற்றியது திமுக. அதுவும் மேற்கு மாவட்டத்தில் திருவட்டார் ஒன்றியத்தை தன்னுடைய சொந்த முயற்சியால் ஜெகநாதன் கைப்பற்றினார். மாவட்ட ஊராட்சி வார்டுகள் 11-ல் ஒன்றை கூட திமுக வால் கைபற்ற முடியவில்லை. 

 


இப்படி குமரியில்  படுதோல்வி கண்ட திமுகவில் எம்எல்ஏவும் கிழக்கு மாவட்ட செயலாளருமான சுரேஷ்ராஜன் மற்றும் எம்எல்ஏவும் மேற்கு மாவட்ட செயலாளருமான மனோதங்கராஜ் இருவரையும் மாவட்ட செயலாளா் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக குமரி திமுகவினா் மத்தியில் காட்டு தீ போல் பரவியுள்ளது. இருவரையும் மாற்றிவிட்டு மாவட்ட பொறுப்பாளராக ஆஸ்டின் எம்எல்ஏ நியமிக்கப்பட இருப்பதாகவும் கூறுகின்றனா். இது அவா்களின் ஆதரவாளா்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


இதற்கிடையில்  மேற்கு மாவட்ட செயலாளா் மனோதங்கராஜ் தான் மாற்றப்பட இருக்கிறார். சுரேஷ்ராஜன் ஸ்டாலினிடம் நெருக்கமாக இருப்பதால் அவரை மாற்றமாட்டார் என சுரேஷ்ராஜனின் ஆதரவாளா்கள் கூறிவருகின்றனா். அதே நேரத்தில் அரசு சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் இருந்து சுரேஷ்ராஜன் பாதியில் சோகத்தில் எழுந்து சென்றார். அதற்கு காரணம் சுரேஷ்ராஜன் மட்டும் மாற்றம் என்ற தகவல் சென்னையில் இருந்து கிடைத்ததால் தான் என்கின்றனா் மனோதங்கராஜின் ஆதரவாளா்கள். மொத்தத்தில் இரண்டு மாவட்ட செயலாளா்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்