![DMK And Congress members celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/1_g2hgVeOy1GqQ0eg6ZIhP7gpZ2jaumvfZgWQOw1M2M/1677741120/sites/default/files/2023-03/th-1_1.jpg)
![DMK And Congress members celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/ApcEYTCsUh915NWvME6ji5n7UszXwGjdL265YBWLUa0/1677741120/sites/default/files/2023-03/th_1.jpg)
![DMK And Congress members celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/DOtYIjtjOUDVSigWaS63Q3fj-hFQ58QRC_A3YAqE0sM/1677741120/sites/default/files/2023-03/th-2_1.jpg)
![DMK And Congress members celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/cN_YKv21LB1lUaqmsDrtFFGm4L4G8Fhyh4En9fCx_vQ/1677741120/sites/default/files/2023-03/th-3_1.jpg)
![DMK And Congress members celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/OcqO7p7FRPjpLaCsNSHLqTdp1qKoS1o0z-4sXT1TZhk/1677741120/sites/default/files/2023-03/th-4_1.jpg)
![DMK And Congress members celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/0RkyrQHmi3atuU9Jb4PrxuoqUjZQGW77miiEVolbcqE/1677741120/sites/default/files/2023-03/th-5_0.jpg)
![DMK And Congress members celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/x05Efb9tPYMQfagVqwl9HH3Kk3P0Gx3UzWVcrDMj8Cg/1677741120/sites/default/files/2023-03/th-7_0.jpg)
![DMK And Congress members celebration](http://image.nakkheeran.in/cdn/farfuture/KWpKYLD--33jb8iHFjX9GGhqs8_BXBidMQy28bUAaEM/1677741120/sites/default/files/2023-03/th-8_0.jpg)
ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காலை 11.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 34,331 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 12,981 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2,351 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 351 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மூன்று சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் தற்பொழுது நான்காம் சுற்று எண்ணிக்கை தொடங்கியது. திமுக கூட்டணியின் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதன் காரணமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.