Skip to main content

திமுக, அதிமுக எடுத்த ஒரே மாதிரியான முடிவு!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து  சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். இந்த சட்டசபை கூட்ட தொடர் ஜூலை 30 ஆம் தேதி வரும் வரை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்து இருந்தார்.
 

dmk



இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அதிமுக, திமுக காட்சிகள் சட்ட சபை கூட்ட தொடரை விரைவில் முடிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தன. வேலூர் நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தற்போது சட்ட மன்ற அலுவல் ஆய்வுக் கூட்டமானது  நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் இபிஎஸ், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளார்கள். அப்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வருவதால் தேர்தல் பணிகளை செய்வதற்கும் , தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காகவும் சட்டமன்ற கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி ஜூலை 20ஆம் தேதியோடு சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்