Skip to main content

ராஜ்யசபா சீட்டிற்கு பதிலாக தேமுதிகவுக்கு எடப்பாடி கொடுத்த பரிசு... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

சமீபத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை அறிவித்தது. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் சுதீஷ் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த அதிருப்தியால் கூட்டணியில் ஏதேனும் மாற்றம் வருமா, தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறுமா அல்லது வெளியேற்றப்படுமா என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   
 

dmdk



இந்த நிலையில் ராஜ்யசபா சீட் கொடுக்காத கோபத்தில் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த தே.மு.தி.க.வின் நிலை என்ன என்று விசாரித்த போது, தே.மு.தி.க. இளைஞரணிப் பொறுப்பாளரான சுதீஷ் வெளிப்படையாகவே கோபத்தைக் காட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் வரப்போகும் நிலையில் தே.மு.தி.க.வின் கோபத்தை எதுக்கு சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்த எடப்பாடி, தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் திருமதியுமான பிரேமலதாவிடம் சமாதானம் பேச, தன் சீனியர் அமைச்சர்கள் சிலரை அனுப்பி வைத்துள்ளார். அப்போது ராஜ்யசபா பதவி கொடுக்காததற்கு ஈடாக ’"சமாதான மொய்யை'’ கணிசமாக எழுதிவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இது ராஜ்யசபா பதவியால் லாபமடைந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்