காஞ்சிபுரம் அமமுக பிரமுகர் முன்னாள் அதிமுக நகர செயலாளராக இருந்த புல்லட் பரிமளம். இவருடைய இன்னோவார் கார் இன்று காலை டிடிவி தினகரன் வீட்டு வாசலில் அடித்து நொறுக்கப்பட்டு மேலும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டிருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார் முதல் கட்ட தகவலாக புல்லட் பரிமளம் வந்த கார் நபர்களால் தாக்கபட்டதாக போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
புல்லட் பரிமளம் சமீபத்தில் அமமுகவில் இருந்தும் ஒழுங்கு நடவடிக்கையில் நீக்கப்பட்டார். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணையை துவங்கிய அடையாறு துணை அணையர் ஷெசாங் சாய், சிசிடிவி ஆய்வுக்கு பின்னர், அந்த காரின் உரிமையாளர் புல்லட் பரிமளம் தனது ஆதரவாளர்கள் மூலம் அவரே தாக்கிக்கொண்டு அவரே காரை கொளுத்திவிட்டு நாடகமாடியுள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள புல்லட் பரிமளத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
டிடிவி தினகரன் இவரை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து நீக்கியதற்காக அமமுக மீது பழி போடவே இந்த நாடகத்தை அரங்கேற்றி யுள்ளது தெரியவந்துள்ளது. டிடிவி தினகரனை இன்று சந்தித்து முறையிட வந்துள்ளார் புல்லட் பரிமளம். தினகரனை சந்திக்க அனுமதி மறுக்கவே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார்.
இவர் காஞ்சிபுரம் அதிமுக நகர செயலாளராக இருந்தபோது இது போல நாடகங்களை நடத்தி பரபரப்பை உண்டாக்கியவர். அப்போது பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இதனால் இவரை கட்சியை விட்டு நீக்கினார். இவர் ஏற்கனவே போயஸ்கார்டன் வாசலில் தன் விரலை கிழித்துக்கொண்டு ஜெயலலிதாவுக்காக விரலையே வெட்டிக்கொண்டேன் என்று நாடகம நடத்தியவர்.
அதே போல கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளிவரும் முன்பே அதிமுக 40 இடத்திலும் வெற்றி என்று பேனர் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தியவர். ஜெயலலிதா ஆர்.கே.நகர் தேர்தலில் போட்யிட்டபோது தேர்தல் முடிவு வெளிவரும் முன்பே 4 லட்சம் வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஒட்டி சர்ச்சையை ஏற்படுத்தியவர். இது போல பல நாடகங்களை அரங்கேற்றி தொடர் சர்ச்சையில் சிக்கி விளம்பரம் தேடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாணியை தற்போது தொடர்ந்துள்ளார்.