இந்த தேர்தலில் அனைவராலும் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட தினகரனின் அமமுகாவுக்கு எதிர் பார்த்த வாக்கு வங்கி கிடைக்காததால் பெரிய அதிர்ச்சியில் அக்கட்சியினர் உள்ளனர்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல் அதிகமாக காணப்பட்டது.இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் பிரிந்து சென்று தர்மயுத்தம் நடத்தி தனி கட்சி தொடங்குவதாக இருந்தது.பின்பு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
அதற்குப் பிறகு தினகரன் அதிமுகவில் பிரிந்து அமமுக கட்சி ஆரம்பித்து ஆர்.கே .நகர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.இதனால் தமிழகத்தில் தனி பெரும் கட்சியாக இந்த தேர்தலில் இடம் பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.ஆனால் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் போதுமான ஓட்டு வாங்காமல் மிகக் குறைந்த ஓட்டுகள் மட்டுமே வாங்கியதால் அக்கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் புதிதாக களம் கண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னையில் அனைத்து தொகுதியிலும் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.மேலும் தினகரன் இந்த தேர்தலில் கிங் மேக்கராக இருப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவரது கட்சி வாங்கிய ஓட்டுகளால் அதிமுக கட்சிக்கு பெரிதும் பாதிப்பில்லை என்பதால் அரசியலில் இது தினகரனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.