1996ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். ஜி. கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று ”தமிழ் மாநில காங்கிரசு” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த இவர் ஒரு முறை காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி திமுகவுடன் இணைந்து ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவர்.அப்போது த.மா.க சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது இது அரசியல் வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.இதற்கு பிறகு மக்கள் தலைவர் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர் ஜி.கே.மூப்பனார்.
இதே போல் ராஜிவ் காந்தி மறைந்தபோது ஒரு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு கூட மூப்பனாருக்கு கிடைத்தது. ஆனால் அதை திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதி தடுத்துவிட்டதாக பேசப்பட்டது. இந்நிலையில் மூப்பனார் மறைந்த பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன், அக்கட்சிக்கு தலைமை ஏற்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் தமாகவை இணைத்தார்.மேலும் காங்கிரஸ் கட்சியில், பத்தாண்டுகள், மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய பொறுப்பிலும், இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி., என, பல பதவிகளை வகித்தார்.
காங்கிரஸ் தலைவர், ராகுலுக்கும், வாசனுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரசை விட்டு விலகிய வாசன், த.மா.கா.,வை மீண்டும் துவக்கினார்.இதனிடையே மக்களவைத் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தஞ்சாவூர் தொகுதியில், சுயேச்சை சின்னத்தில், த.மா.கா., போட்டியிட்டுள்ளது.
இந்த நிலையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்று இருந்தார் வாசன். அதிமுக பாஜக கூட்டணியில் தாமாக இடம்பெற்றுள்ளதால் அந்த நிகழ்ச்சியில் வந்து இருந்த பாஜக தலைவர்களுடன் நடப்பு அரசியல் குறித்து மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தார்.இந்த சந்திப்பை தொடர்ந்து தா.மா.கா.வை பாஜகவில் இணைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியன.இது வந்து தா.மா.கா தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.காங்கிரஸ் கட்சியினரும் இதை உற்று கவனித்து வருகின்றனர்.
இது பற்றி தமாகா மூத்த தலைவர் ஞான தேசிகனிடம் பேசிய போது த.மா.கா.வை பாஜகவுடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை, இணைவதாக வந்த செய்திகள் முற்றிலும் தவறானது.பல்வேறு நிகழ்வுகளுக்காக வாசன் அவர்கள் டெல்லிக்கு சென்று இருக்கலாம் இணைவதாக எந்த முடிவும் தமாகா வில் எடுக்கப்படவில்லை இணைவதற்கான வாய்ப்பும் இல்லை தமாகா தனித்தே இயங்கும் என்றார் உறுதியாக.