Skip to main content

‘பசியாற்றும் பணி‘ -நிவாரணப் பணிகளில் அசத்தும் இளைஞர்!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020



கரோனா தாக்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர் ஊடரங்கால் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசின் நிவாரண உதவிகள் கிடைத்தும் கிடைக்காமலும் என்கிற நிலையில்தான் இருக்கின்றன. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நிவாரணப் பணிகளில் அசத்திக் கொண்டிருக்கிறது திமுக. 
 

ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் பலரும் தங்களால் முடிந்தளவுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். 
                        

திமுகவில் முக்கியஸ்தர்கள் செய்து வரும் பணிகள் மட்டுமே வெளி உலகத்திற்குத் தெரியும் நிலையில், திமுகவின் கீழ்மட்ட தொண்டர்கள் செய்யும் உதவிகள் தெரிவிதில்லை. இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர 9- ஆவது வார்டின் முன்னாள் உறுப்பினர் ஆத்தூர் ஜெ.ஸ்டாலின் செய்து வரும் உதவிகள் ஆத்தூர் நகர மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. 
 

முதல் கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. 26-ஆம் தேதியிலிருந்தே ஆத்தூர் நகரில் சாலைகளில் ஆதரவின்றி வசிக்கும் மக்களும், தினக்கூலி வேலை செய்பவர்களும் பசியால் தவிக்கத் துவங்கினர். இந்தச் சூழலில், அவர்களின் பசியைப் போக்குவதற்காக மார்ச் 26- ஆம் தேதி முதல் தற்போது வரை தினமும் காலை- மாலை என இரு வேளைகளிலும் தரமான, சுவையான உணவுகளை வழங்கி வருகிறார் ஆத்தூர் ஜெ.ஸ்டாலின். 
                       

http://onelink.to/nknapp


தனது சொந்த முயற்சியில், ‘பசியாற்றும் பணி‘ என்கிற அமைப்பை உருவாக்கி தினமும் 450 நபர்களுக்கு இரு வேளைகளிலும் உணவு வழங்குகிறார். இதற்காக தனது நண்பர்கள் மற்றும் தனது வார்டிலுள்ள இளைஞர்கள் ஆகியோர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு 500 உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார். இவைகள் தவிர, ரேசன் பொருட்கள் கிடைக்காத பலருக்கும் உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறார் ஜெ.ஸ்டாலின். இளைஞரான இவரது நிவாரணப் பணி வேகத்தைக் கண்டு ஆத்தூர் நகர அதிமுகவினர் திகைத்து நிற்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்