தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டிருக்கிறது.

திருவள்ளூர் - கே.ஜெயக்குமார்
கிருஷ்ணகிரி - செல்லக்குமார்
ஆரணி - விஷ்ணுபிரசாத்
கரூர் - ஜோதிமணி
திருச்சி - திருநாவுக்கரசர்
தேனி - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
கன்னியாகுமரி - வசந்தகுமார்
சிவகங்கை வேட்பாளரை மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை. ஆக, 3 செயல் தலைவர்களும் சீட் வாங்கிவிட்டனர். கரூர், ஆரணி, விருதுநகர், கன்னியாகுமரி தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு, இந்தத் தடவையும் சீட் தந்திருக்கின்றனர். கடந்த தடவை தென்காசியில் போட்டியிட்டவருக்கு இந்தமுறை திருவள்ளூரில் சீட். அதேபோல், ராமநாதபுரத்தில் போட்டியிட்டவருக்கு இப்போது திருச்சியில் சீட். போன தடவை, திருப்பூரில் போட்டியிட்டவர் தற்போது தேனி வேட்பாளர் ஆகியிருக்கிறார். ஆக, காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் பட்டியலில் செல்லக்குமார் மட்டுமே புதுவரவு. மற்றவர்களெல்லாம் பழையவர்களே. செல்லக்குமாரும்கூட சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்தான்.
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் என்று அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக, நேற்றே அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். காங்கிரஸில் இதுவும் சகஜமப்பா.