11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பா.ஜ.க. கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஏற்கெனவே கையில் இருந்த நாடாளுமன்ற தொகுதிகளை இழந்ததன் மூலம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையையும் இழந்திருக்கிறது பா.ஜ.க.
குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கைரானா நாடாளுமன்றத் தொகுதியிலும், நூர்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் பா.ஜ.க. தோற்றிருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி தனித்துவிடப்பட்டதும், உதவியற்றவராக விடப்பட்டதுமே இந்தத் தோல்விக்குக் காரணம் என ஹர்தோயி தொகுதி எம்.எல்.ஏ. ஷியாம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முகநூலில் அவர் எழுதியுள்ள கவிதையில், கோரக்பூர், பூல்பூர் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, கைரானா மற்றும் நூர்பூர் தொகுதி தேர்தல் தோல்விக்காக நாங்கள் பெருத்த சோகத்தில் இருக்கிறோம். அதிகாரிகள் ஊழலில் மிதக்கின்றனர். விவசாயிகள் இந்த அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். பா.ஜ.க. தோல்விக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முந்தைய அரசைவிட தற்போது ஊழல் அதிகரித்திருக்கிறது. அதுதான் என் விரக்திக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.