Skip to main content

''இந்திய கடற்படை மீது கொலை வழக்கு பதிய வேண்டும்''- சீமான் வலியுறுத்தல்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

"A case of  should be registered against the Indian Navy" - Seaman insists

 


மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் படகில் கோடியக்கரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் வீரவேல் என்ற மீனவர் காயமடைந்தார். தற்போது அவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வரும் நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இந்தியக் கடற்படையே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிகழ்விற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ''தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இலங்கை கடற்படை அட்டூழியங்கள் இனியும் தொடராதவாறு தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 'தமிழக மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்' எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாகப் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்