Skip to main content

 பாலிதீன், பிளாஸ்டிக் பைகளுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி வழக்கு

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

palii,  theerath,

முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில், பாலிதீன், பிளாஸ்டிக் பைகளுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி, அந்த மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நீக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி நீலகிரி மாவட்ட அண்ணா வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, பாலிதீனுக்கு மாற்றாக எந்த பையை பயன்படுத்துவது என கண்டறியும் வரை, பாலதீன் பைக்கு பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதையடுத்து, வியாபாரிகள் சங்கத்தின் மனுவை பரிசீலிக்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கடைகளில் ஆய்வு மேற்கொண்ட மண்டல நல அலுவலர்! (படங்கள்)

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

 

இன்று (21.10.2021) சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் பணி நடைபெற்றது.

 

75 கடைகளுக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டு, 150க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மண்டல நல அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் துப்பரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு  உடனிருந்தனர்.

 

 


 

Next Story

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

karnataka state night curfew imposed today night

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று (23/12/2020) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக கர்நாடகா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கர்நாடகா மாநிலத்தில் இன்று (23/12/2020) முதல் ஜனவரி 2- ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்ட்ரா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.