திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் சீனிவசன் வழங்கினார்.
கரோனா எதிரொலி மூலம் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே மாஸ்க், கிருமிநாசினி, சோப்பு போன்ற கரோனா தடுப்பு உபகரணங்களுடன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை தொகுதி எம்.எல்.ஏ.வும், வனத்துறை அமைச்சருமான சீனிவாசன் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து தொகுதியிலுள்ள மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளையும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். அதைத் தொடர்ந்துதான் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் இருக்கும் 438 தூய்மை பணியாளர்கள் மற்றும் திண்டுக்கல் ஒன்றியங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் வேட்டி, சேலை, துண்டு உட்பட நலத்திட்ட உதவிகளை அந்தந்த பகுதிகளுக்கு சென்று அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.