2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கை அறிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த நிதிநிலை அறிக்கை சமூகநீதிக் கொள்கை அறிக்கை. வெறும் வரவு செலவு கணக்குகள் மட்டுமில்லாமல் அரசின் கொள்கை, கோட்பாட்டைத் தெளிவுபடுத்தும் செயல் திட்ட அறிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டை முற்போக்கான, முன்னேற்றமான திசையில் இட்டுச்செல்லும் வகையில் தொலைநோக்கோடு நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையை வழங்கிய முதலமைச்சர், நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்துள்ளார்.