|
கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். இந்த நிலையில் கரோனா குறித்து அடிக்கடி பேட்டி கொடுத்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் சமீப காலமாக கரோனா வைரஸ் பரவல் குறித்து எந்த அறிக்கையும் விடுவதில்லை.இதற்கு முதல்வர் எடப்பாடிக்கும், அமைச்சருக்கும் நடக்கும் உட்கட்சி அரசியல் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.அதேபோல் சில அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியின் கரிசனப் பார்வை தற்போது சசிகலாவின் பக்கம் திரும்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் மந்திரிகள் தொடங்கி, கீழ்மட்ட தொண்டர்கள் வரை பலரும் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதாலும், அ.தி.மு.க.வில் கோஷ்டி யுத்தம் தொடர்வதாலும்,அ.தி.முக.வை வலிமைப்படுத்த,சசிகலாவை ரிலீஸ் செய்யலாமா என்று பா.ஜ.க. தலைமை ஆலோசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.அவர் மூலம் அ.தி.மு.க-வை ஒருங்கிணைந்து வலிமையானால், தங்கள் அரசியல் எதிர்காலத்துக்கு அது பயன்படும் என்பது பா.ஜ.க.வின் கணிப்பு என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.இது சசிகலா காதுக்கு வந்ததில் இருந்து அவர் பரபரப்பாய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடிக்கடி தினகரனைத் தொடர்பு கொண்டும் அவர் உற்சாகமாப் பேச ஆரம்பித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.