தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் வி.பி.துரைசாமி. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, இதற்கு முன்பு வகித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவியை துரைசாமிக்கு வாங்கித் தருவதாக உறுதியளித்த முருகன், அது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டாவிடம் பேசியிருப்பதாகச் சொல்கின்றனர்.
இந்த நிலையில், துரைசாமியை தொடர்ந்து இன்னும் சில முக்கிய தலைகள் வரும் என்று பா.ஜ.க. தரப்பில் கூறிவருகின்றனர். இதுபற்றி விசாரித்தபோது, அழுத்தமாக கால் ஊன்ற முடியாத மாநிலங்களில், செல்வாக்காக இருக்கும் கட்சிகளில் குழப்பம் உருவாக்குவது பா.ஜ.க. பாலிசி என்கின்றனர். அதன்படி, தமிழகத்தில் தி.மு.க. மீது குறி வைத்துள்ளார்கள். ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம் என்று பா.ஜ.க. மேலிடப் பிரமுகர்கள் ஓப்பனாவே பேசி வருகின்றனர். ஸ்டாலின் இமேஜை பாதிக்க வைக்கிற மாதிரி தி.மு.கவில் 6 மா.செ.க்களை தூக்க பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அறிவாலயத்திலிருந்து கமலாலயம் நோக்கி எவ்வளவு பேரை கொண்டு வருவது என்று தீவிர டிஸ்கஷன் நடந்து கொண்டிருப்பதாக சொல்கின்றனர்.