Skip to main content

ஜெயலலிதா ஸ்டைலில் நடிகர் ரஜினி அரசியல்... திமுகவிற்கு எதிராக களமிறங்கும் கட்சியுடன் கூட்டணி?

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் அறிவித்திருந்தார். அதேபோல் 234 தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த நடிகர் ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்வேன் என்று கூறினார். மதம், சாதி வேறுபாடு இல்லாத அரசியலாக இருக்கும் என்றும் சிஸ்டம் சரியில்லை என்றும் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் ரஜினி புதிய கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று பேசி வருகின்றனர். அப்போது மதுரையில் பெரிய மாநாடு மாதிரி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அப்போது கட்சியின் பெயர், கொடியை, ரஜினி அறிமுகம் செய்வார் என்றும் கூறுகின்றனர். 
 

rajini



இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினி திமுகவிற்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கலாம் என்று கூறுகின்றனர். அதாவது தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஜெயலலிதா கூட்டணியில் சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பார். அதே போல் திமுகவிற்கு எதிராக இருக்கும் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஒரு சில கட்சிகளையும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று தகவல் சொல்லப்படுகிறது. மேலும் பாஜகவிற்கு ஆதரவாக ரஜினி கூறும் கருத்துக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் கூட்டணி வைக்க தற்போது இருந்தே பாஜக திட்டம் போட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு பாஜக சார்பில் எச்.ராஜா மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் பல முயற்சிகளை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  

 

சார்ந்த செய்திகள்