வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்குகளை அதிகரிக்கவும், திமுக மீது அவதூறு பரப்பி திமுக பெயரை டேமேஜ் செய்யும் முடிவில் பாஜக களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில் 2ஜி அப்பீல் வழக்கை வேகப்படுத்தவும், சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தை மீண்டும் எடுத்து விசாரிக்க பா.ஜ.க. மேலிடம் முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். இதில் மு.க.ஸ்டாலினை சந்தித்த நபர்கள் பற்றியும் விசாரிக்க முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தி.மு.க.வின் இமேஜை டேமேஜ் செய்து திமுகவின் வாக்கு வங்கியை குறைத்து விட வேண்டும் என்றும் என்று பாஜக திட்டம் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.