கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, "மோடி அரசு விவசாயிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் கிசான் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ஆண்டுக்கு 6000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. மண்வளப் பாதுகாப்பு அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், நம்முடைய நாடு மிகவும் பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால், மாநிலம் பாதுகாப்பான கைகளில் இல்லை.
திமுக மாநிலக் கட்சி இல்லை. அது ஒரு குடும்பக் கட்சி. மன்னராட்சி நடக்கும் கட்சி. குடும்பத்திற்காக இருக்கும் கட்சி. குடும்பம் என்பது கலைஞர் மற்றும் அவரது மகன்கள் ஆவர். திமுக என்றால் மன்னராட்சி, பணமோசடி, கட்டப்பஞ்சாயத்து ஆகும். மக்கள் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, சட்டமன்றத் தேர்தலிலும் மாற்றத்தைக் கொண்டுவர உள்ளனர்." என்று பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.