அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தலைவர்கள் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு ரஜினியின் இந்த பேச்சு அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிண அரசியல் செய்யும் சைமனுக்கு சமஸ்கிருதம் செத்த மொழியாக தெரிவது ஆச்சரியமில்லை. தமிழ்ப்பழமொழி””செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்யாசம் நாய்க்குத் தெரியுமா”⁉️ https://t.co/61PBTQUEkr
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) January 20, 2020
ஒருவனை அறிவாளி என்று சொன்னால் அடுத்தவன் அப்போ நான் முட்டாளா என்று கேட்பது முட்டாள்தனத்தின் உச்சம். https://t.co/Vac4HBAf3T
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) January 20, 2020
நாம் வணங்கும் தெய்வங்களுக்கு 100% நம்பிக்கையுடன் ராஜராஜ சோழன் போன்ற நாட்டை ஆண்ட மாமன்னர்கள் கோயில்கள் கட்டி பராமரித்து வந்துள்ளர். அதன் வழிமுறையாக நடக்கும் ஆகம விதிகளை மாற்ற இறை நம்பிக்கை இல்லாத எந்த நாதாரிகளுக்கும் அருகதை கிடையாது. ??????
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) January 20, 2020
இந்த நிலையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி என கூறியிருந்தார். சீமானின் இந்த கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிண அரசியல் செய்யும் சைமனுக்கு சமஸ்கிருதம் செத்த மொழியாக தெரிவது ஆச்சரியமில்லை. தமிழ்ப்பழமொழி” செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்யாசம் நாய்க்குத் தெரியுமா என்று கூறியுள்ளார். அதே போல் முரசொலி விவகாரத்திற்கும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒருவனை அறிவாளி என்று சொன்னால் அடுத்தவன் அப்போ நான் முட்டாளா என்று கேட்பது முட்டாள்தனத்தின் உச்சம் என்று கூறியுள்ளார். மேலும் நாம் வணங்கும் தெய்வங்களுக்கு 100% நம்பிக்கையுடன் ராஜராஜ சோழன் போன்ற நாட்டை ஆண்ட மாமன்னர்கள் கோயில்கள் கட்டி பராமரித்து வந்துள்ளர். அதன் வழிமுறையாக நடக்கும் ஆகம விதிகளை மாற்ற இறை நம்பிக்கை இல்லாத எந்த நாதாரிகளுக்கும் அருகதை கிடையாது என்றும் கூறியுள்ளார்.