இன்று தொலைக்காட்சியில் திரௌபதி சபதம். கௌரவர்களின் முடிவின் ஆரம்பம். அதேபோல் இந்து விரோத திக, திமுக (துரியோதனன், துச்சாதனன் கும்பல்) வை வருகின்ற தேர்தலில் தோற்கடிக்க ஒவ்வொரு இந்துவும் சபதமேற்கும் தருணமிது. சிலருக்கு திரௌபதி என்ற பேரைக் கேட்டாலே பயம் கவ்விக் கொள்ளும்.
— H Raja (@HRajaBJP) May 26, 2020
சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்திற்குப் பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இப்படம் வட மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் படமாகவும், அப்பா - மகள் பற்றி பேசும் படமாகவும் உருவாகியிருந்தது. நடிகர் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரெளபதி படத்தை வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்படத்தக்கது.
இந்த நிலையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் திரௌபதி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்று தொலைக்காட்சியில் திரௌபதி சபதம். கௌரவர்களின் முடிவின் ஆரம்பம். அதேபோல் இந்து விரோத தி.க., தி.மு.க. (துரியோதனன், துச்சாதனன் கும்பல்) வை வருகின்ற தேர்தலில் தோற்கடிக்க ஒவ்வொரு இந்துவும் சபதமேற்கும் தருணமிது. சிலருக்கு திரௌபதி என்ற பேரைக் கேட்டாலே பயம் கவ்விக் கொள்ளும் என்றும், திருமலா திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி கோவில் சொத்துகளை விற்க நினைப்பது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது. ஒரு சர்ச் அல்லது மசூதி சொத்துகளை விற்க ஜெகன் மோகன் முயற்சிப்பாரா? ஆந்திராவை கிறித்தவ மாநிலமாக்கும் முயற்சியின் முதல் படியே இது என்றும், கோவில்கள் அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.