Skip to main content

உங்கள் கனவுகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க.... பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஸ்டாலின்

Published on 21/02/2019 | Edited on 21/02/2019


 

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதனை சேர்க்க திட்டமிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 

தனது முகநூல் பதிவில் இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, 
 

‘தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு!’
 

'உங்கள் எண்ணங்களும் அரசேற அரிய தருணம்.
 

உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொண்டு எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள்.

 

mkstalin



அடிமை அரசால் வளர்ச்சி என்கிற பாதையில் அதள பாதாளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை முன்னேற்றுவதில், உங்களுடைய கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.
 

உங்களுடைய கருத்துகளை எங்களுக்கு அனுப்ப - dmkmanifesto2019@dmk.in
 

மேலும், இந்தப் பதிவின் கீழும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
 

அதேபோல், #DMKmanifesto2019 என்கிற #டேக்கிலும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யலாம். (பிப்ரவரி 28 - 2019 க்குள் அனுப்பலாம்). இவ்வாறு தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்