2008 வரை கட்டாமல் இருந்த மிகவும் உயரமான தவ்லக் பெக் ஒல்டி விமான தளத்தை கட்டிய விமானப்படை தளபதி பிரணாப் மீது நடவடிக்கை எடுத்து அதை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று சீனாவிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய அன்றைய நிதி அமைச்சர் பற்றி இன்று வரை ஏன் மௌனம் https://t.co/CxTIA2R2ki
— H Raja (@HRajaBJP) June 18, 2020
லடாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த மோதலில், இரு தரப்பிலும் ராணுவ வீரர்களில் உயிரிழந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாகச் சீனா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பா.ஜ.க.-வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய - சீனப் பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், 2008 வரை கட்டாமல் இருந்த மிகவும் உயரமான தவ்லக் பெக் ஒல்டி விமான தளத்தைக் கட்டிய விமானப்படை தளபதி பிரணாப் மீது நடவடிக்கை எடுத்து அதை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என்று சீனாவிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய அன்றைய நிதி அமைச்சர் பற்றி இன்று வரை ஏன் மௌனம் என்றும், சீன ராணுவம் நமது முப்படைகளை எதிர் கொண்டால் போதும். ஆனால் இந்தியாவோ சீனாவின் முப்படைகளையும், இந்தியாவில் உள்ள சீனாவின் ஐந்தாம் படையையும் சேர்த்து 4 படைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது நம் நாட்டின் துரதிருஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.