Skip to main content

திமுக தலைவர் ஸ்டாலினை பேட்ட ரவுடி என்று கடுமையாக விமர்சித்த பாஜகவின் எச்.ராஜா... கோபத்தில் திமுகவினர்!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

சமீபத்தில் சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்றும், முரசொலி வைத்திருத்திருந்தால் திமுகவினர், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் பேசினார். ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

bjp



இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் போது, எனக்கு எதிராக திகவினர், திருமாவளவன் போன்றவர்கள் என்னுடைய படத்தை எரித்தார்கள். அப்படி எரிக்கும் போது எங்காயாவது 20 பேருக்கு மேல் இருந்தார்களா என்று கேள்வி எழுப்பினார். அதே மாதிரி இது பெரியார் மண் என்று கோஷம் போட்றாங்க...நாங்க ஆன்மீகத்தை அனுமதிக்கிறோம் என்கின்றனர். நான் கேட்கிறேன் நீங்க யாருடா ஆன்மீகத்தை அனுமதிக்க என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், பேட்ட ரவுடி மாதிரி ஒரு எதிர்க்கட்சி தலைவர் பேசலாமா என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். ஏனென்றால் அடிக்கணும் அப்படினு பேசுனதா நீங்க தான் சொல்றிங்க, அதுக்கு தான் நான் சொல்றேன் என்று கூறினார். 


அதே போல் எல்லாருக்கும் தந்தை பெரியார் என்கின்றனர். ஆனால் திகவில் வீரமணி, கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன், ராமகிருஷ்னன் எல்லாம் தனி தனி பிரான்ச் என்றார். மேலும் இன்னும் எத்தனை விதம் விதமான பிரியாணி வைப்பார்களோ அதுபோல் எத்தனை பிரான்ச் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் கூறினார். துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு ரஜினி பேசியது சரி தான். அவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். தொஅடர்ந் பேசிய அவர் நீங்க ஆண்டவனை பற்றி தப்பாக பேசியதற்காக திமுக, திகவினர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு பின்பு இதை பற்றி பேசலாம் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து திமுகவினர் பலர் எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்