தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி நிரப்பப்பட்டாலும் மற்ற பதவிகளுக்கு தமிழக பா.ஜ.க.வினரிடையே பவர் யுத்தம் பரபரப்பா நடப்பதாகச் சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வில் புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் தலைமை நிர்வாகிகளும் புதுசாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகக் கூறுகின்றனர். அந்தப் பதவிகளை நோக்கித்தான் இப்போது கட்சிப்புள்ளிகள் போட்டி போடுவதாகச் சொல்லப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 7 பொதுச் செயலாளர் பதவியைக் குறிவைத்து எக்ஸ் எம்.பி. நரசிம்மன், எக்ஸ் எம்.எல்.ஏ. வேதரத்தினம், கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன், விக்டோரியா கௌரி ஆகிய பா.ஜ.க. புள்ளிகள் தீவிரம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் 8 துணைத் தலைவர்கள் பதவிகள் நிரப்பப்பட இருப்பதால், அதற்கு எக்ஸ் எம்.பி. சசிகலா புஷ்பா, எக்ஸ்.எம்.எல்.ஏ. ரவிராஜ், மாஜி மந்திரி நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் காய் நகர்த்தி வருவதாகக் கூறுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 10 செயலாளர் பதவிகளுக்காக நடிகை காயத்ரி ரகுராம், கே.டி.ராகவன் உள்ளிட்டோரும் களத்தில் இருப்பதாகச் சொல்கின்றனர். இதேபோல் மாநில இளைஞரணித் தலைவர் பதவிக்கு இப்போது இருக்கும் வினோஜும் மோடியின் சிஷ்யர் என்று சொல்லப்படும் பிரித்வியும் போட்டியிடுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அங்கே யுத்த ஆரவாரம் களைகட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.