Skip to main content

திமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா?

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பல்வேறு கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.மோடி அலை வீசிய போது கூட 270 சீட்டு கிடைக்கும் என்று தான் கூறினர்.அதுமட்டுமில்லாமல் அப்போது காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியும் இருந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சி மீது மக்கள் மிகுந்த அதிருப்தியோடு உள்ளனர்.மேலும் மாநில கட்சிகள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் பெரும் என்று வந்துள்ளது.குறிப்பாக தென்னிந்தியாவில் பாஜகவுக்கு போதிய வரவேற்பு இல்லை.அப்படி இருக்க கருத்துக்கணிப்பில் 300க்கும் மேற்பட்ட சீட் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் வந்தது பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   
 

bjp



பாஜகவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டின் படி தொங்கு பாராளுமன்றம் அமையும் என்று பாஜக தலைமைக்கு சென்றுள்ளதால் சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இந்த நிலையில் திமுகவின் நிலைப்பாட்டை அறிய பாஜக கட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஒரு வேளை திமுக ஆதரவு தேவைப்பட்டால் அதிமுக கட்சியை கழட்டிவிட்டு திமுகவின் ஆதரவை பாஜக கேட்க தயங்காது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


இதனிடையே நேற்று செய்தியாளர் சந்திப்பில் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்குமா? என செய்தியாளர் எழுப்பினர் அதற்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என கூறினார். இதனால் பாஜக தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு சில நிபந்தனைகளுடன் திமுகவை அணுகி ஆதரவை கேட்கும் என்று அரசியால் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்