2007- ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் (ஆகஸ்ட்- 26) நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் ஒரு நட்சத்திர விடுதியில் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் இறந்த நிலையில் கண்டுடெக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் அவ்ரது உடலில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் சசிதரூருக்கும், சுனந்தாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்பு இந்த பிரச்னை அதிகமாகி அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து நேற்று டெல்லி நீதி மன்றத்தில் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் பிரேதப் பரிசோதனை குறித்து ஒரு போலீஸ் அதிகாரி சாட்சியமளித்து இருக்கிறார்.
அப்போது டெல்லி காவல் துறை அதிகாரி அதுல் ஸ்ரீவத்சன், சுனந்தாவின் உடலில் 15 காயங்கள் இருந்ததாக தெரிவித்தார்.அந்த காயங்கள் அவர் இறந்ததற்கு 12 மணி நேரத்திலிருந்து,நான்கு நாட்களுக்குள் ஏற்பட்டவை என்றும்,அதனால் சுனந்தாவை அவரது கணவர் சசி தரூர் அடித்துத் துன்புறுத்தி இருக்கலாம் என்றார். இதனால் இந்த வழக்கில் சசிதரூர் மீது மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரிக்க கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.