
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, காலி பணியிடங்கள் குறித்து திமுக அரசை கேள்விக் கேட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3,935 பணியிடங்கள் (TNPSC Group - 4) தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு. இந்த தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் இது!
ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் இளைஞர்கள் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிக்கையில் சொன்னது நினைவிருக்கிறதா திரு ஸ்டாலின் அவர்களே ? VAO உள்ளிட்ட அரசுப்பணிகளில் சேர வேண்டும் என்பது பல ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களின் கனவு. பணியிடங்கள் இருந்தும் அதனை நிரப்பாமல் வஞ்சிப்பது, இளைஞர்களின் கனவை சிதைக்கும் செயல்!
கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், "அரசு" என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக Group-4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கேட்டுக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.