Skip to main content

“வேறு வழியில்லை என்ற அடிப்படையில்..... எதிரான திட்டங்களில் கவனம் செலுத்தக்கூடாது” - திருமாவளவன் பேட்டி!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

"On the basis that there is no other way ..... do not focus on the plans against" - Thirumavalavan

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் டெல்லியில் நேற்று (09.08.2021) நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை கடும் அதிர்ச்சியையும், மிகுந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் கடன் சுமையை சமாளிக்க ‘வேறு வழியில்லை’ என்ற அடிப்படையில் மக்களுக்கு எதிரான திட்டங்களில் கவனம் செலுத்தக்கூடாது. குறிப்பாக மதுக்கடைகளை நம்பி வருவாயை மேம்படுத்துவதற்கு திமுக அரசு திட்டங்கள் தீட்டாது என்றும் நம்புகிறோம். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை. ஆனால் அதல பாதாளத்தில் இருக்கும் தமிழகத்தை மீட்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காக மதுக்கடைகளைப் புதிதாக திறக்கக் கூடாது என்பது எங்களது கோரிக்கை” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்