கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. பாஜகவின் தேசியத் தலைவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்த வண்ணம் உள்ளனர். மேலும், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதால் ஆட்சியைத் தக்கவைக்க தீவிரப் பிரச்சாரங்களையும் பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்து தலைவர்கள் உரையாற்றுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி 5 முறை கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், கடந்த 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 118 கி.மீ. தொலைவுடைய பெங்களூரு முதல் மைசூர் வரையிலான 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு விழா மேடையில் பேசும்போது, “என்னை கல்லறை தோண்டி புதைக்க நினைக்கிறது காங்கிரஸ்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா பேசுகையில், "கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும். நமக்கு பாபர் மசூதி தேவை இல்லை. ராமஜென்ம பூமி தான் வேண்டும். லண்டனில் ராகுல் காந்தி பேசிய போது இந்தியாவை இழிவு செய்ய முயற்சி செய்தார். மோடி இருக்கும் வரை ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது" என்று பேசினார். அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஷ்வா ஷர்மாவின் இந்த பேச்சு மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் இணையவாசிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Karnataka | We've to bring BJP to power here. We do not need Babri Masjid anymore, we want Ram Janmabhoomi. Rahul Gandhi tried to defame India in London, but I want to him that "you'll never be able to become the PM until Modi ji is there": Assam CM HB Sarma in Kanakagiri (13.03) pic.twitter.com/1Reqh2QgPy
— ANI (@ANI) March 13, 2023