அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார்.
இதுதொடர்பாக அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி கூறுகையில், ஆளாளுக்கு ஒன்று பேசினால் நன்றாக இருக்காது. சென்னையில் 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பார் என்ன சொல்கிறார்களோ அதனை கேட்போம். தற்போது இரண்டு தலைமைகள் உள்ளது. இரண்டு தலைமைகள் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை.
ஜெயலலிதா, கலைஞர் இல்லாத நேரத்திலும் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளோம். இதுவே அதிமுகவுக்கு பெரிய வெற்றி. ஒரு தவறான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் செய்ததால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது. 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கடும் தோல்வியை சந்தித்து. அடுத்த தேர்தலில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இந்த சூழ்நிலையிலும் அமமுகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அதிமுக தானாகவே வலுப்பெறும் என்றார்.