மே 19ஆம் தேதி ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். அவருக்காக காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட நடுப்பாளையம் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தினகரனோடு ஒரு வருடம் பயணித்தேன். அப்படி பயணித்த காலங்களில் அவரது நடவடிக்கைகளை நான் கூர்ந்து கவனித்தேன். அவருடைய ஒரே இலக்கு அதிமுகவை கைப்பற்ற வேண்டும். முதலமைச்சராகனும். பதவி ஆசை. அந்த பதவி வெறிதான் எங்கள் 18 பேரை ஆளுநரிடம் மனு கொடுக்க வைத்தார். இது தகுதி நீக்கம் வரை சென்றது. 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதற்கு, தினகரனின் முதலமைச்சர் ஆசையே காரணம் என குற்றம் சாட்டினார்.