தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, ஐயுஎம்எல், மஜக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு கடந்த வியாழன் (மார்ச் 11) இரவு இறுதி செய்யப்பட்டது.
இந்த தேர்தலில், திமுக 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. இதையடுத்து, திமுக வேட்பாளர்கள் பட்டியல், ஒரே கட்டமாக நேற்று (மார்ச் 12) வெளியிடப்பட்டது. அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை அறிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஓமலூர் தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 10 தொகுதிகளிலும் திமுக நேரடியாக களம் இறங்குகிறது.
சேலம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:
கெங்கவல்லி (தனி):
வேட்பாளர்: ஜெ.ரேகா பிரியதர்ஷினி (38)
கணவர்: பாபு (துணை ஆட்சியர்)
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: எம்ஏ., எம்பில்., எம்ஏ (பொது நிர்வாகம்), பிஹெச்.டி.,
தொழில்: குடும்பத் தலைவி
2006 - 2011 வரை சேலம் மாநகராட்சி மேயராக இருந்தார். கடந்த 2016 தேர்தலின்போது கெங்கவல்லியில் போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனால் அவருக்கு மீண்டும் இதே தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர் (தனி):
வேட்பாளர்: ஜீவா ஸ்டாலின் (32)
கணவர்: ஸ்டாலின்
தொழில்: விவசாயம், ரியல் எஸ்டேட்
ஊர்: ஆத்தூர்
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு
கட்சிப் பதவி: 9வது வார்டு மகளிரணி செயலாளர்
ஏற்காடு (தனி):
வேட்பாளர்: சி. தமிழ்செல்வன் (50)
ஊர்: பேளூர்
தொழில்: விவசாயம்
2006 - 2011இல் ஏற்காடு எம்எல்ஏ ஆக இருந்தார். கடந்த 2016 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் தெற்கு:
வேட்பாளர்: ஏ.எஸ்.சரவணன் (49)
ஊர்: களரம்பட்டி, சேலம்
கல்வித்தகுதி: 7ஆம் வகுப்பு
கட்சிப் பதவி: தாதகாப்பட்டி பகுதி செயலாளர்
தொழில்: ஜவுளி ஏற்றுமதி
சேலம் வடக்கு:
வேட்பாளர்: ஆர்.ராஜேந்திரன் (62)
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: பி.ஏ., பி.எல்.,
கட்சி பதவி: சேலம் மத்திய மாவட்டச் செயலாளர்
தொழில்: வழக்கறிஞர், விவசாயம்
2006, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று இருமுறை எம்எல்ஏ ஆக இருந்துள்ளார். சேலம் வடக்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏவான இவருக்கு, மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மேற்கு:
வேட்பாளர்: ஏ. ராஜேந்திரன் (53)
ஊர்: சேலத்தாம்பட்டி
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு
கட்சிப் பதவி: தலைமை பொதுக்குழு உறுப்பினர், சேலத்தாம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர்.
தொழில்: வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்
மேட்டூர்:
வேட்பாளர்: எஸ்.ஸ்ரீனிவாசபெருமாள் (47)
ஊர்: மேச்சேரி
கல்வித்தகுதி: பிளஸ் 2
கட்சி பதவி: மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர்
தொழில்: திரையரங்க உரிமையாளர்
சங்ககிரி:
வேட்பாளர்: கே.எம்.ராஜேஷ் (41)
ஊர்: சங்ககிரி
கல்வித்தகுதி: பட்டதாரி
கட்சிப் பதவி: ஒன்றிய பொறுப்பாளர்
தொழில்: பள்ளிக்கூடம், பேருந்து உரிமையாளர்
எடப்பாடி:
வேட்பாளர்: சம்பத்குமார் (37)
ஊர்: கொங்கணாபுரம்
கல்வித் தகுதி: பட்டதாரி
கட்சிப் பதவி: சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்
தொழில்: விவசாயம்
வீரபாண்டி:
வேட்பாளர்: மருத்துவர் கே.தருண் (40)
ஊர்: சேலம்
கல்வித்தகுதி: எம்பிபிஎஸ்., எம்எஸ்., எம்பிஏ.,
கட்சி பதவி: தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர்
தொழில்: மருத்துவர்
இவர்களில், சேலம் தெற்கு, சேலம் மேற்கு, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர் (தனி), வீரபாண்டி ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் களத்தில் முதன்முறையாக போட்டியிடுகின்றனர். ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய இரு தனி தொகுதிகளில் மட்டும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார், எடப்பாடியின் அரசியல் அனுபவத்தை விட வயதில் குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.