Published on 03/05/2022 | Edited on 03/05/2022

இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.
இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள கந்தசாமி ஆலயத்தில் வழிபாடு செய்தார். இன்று காலை இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ், ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோருடன் சென்று அவர் வழிபாடு செய்தார். வழிபாட்டை முடித்துவிட்டு நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். மேலும், இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரனையும் சந்தித்தார்.